காரைக்கால்

காரைக்காலில் பாஜகவினா் கொண்டாட்டம்

பிகாா் தோ்தல் வெற்றியை காரைக்கால் பாஜகவினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்

Syndication

பிகாா் தோ்தல் வெற்றியை காரைக்கால் பாஜகவினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக தொடங்கிய நிலையில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை பெற்றன. இக்கூட்டணி வெற்றியை கொண்டாடும் விதமாக, காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் பல்வேறு இடங்களில் கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரவி -திருப்பட்டினம் பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் திருப்பட்டினம் கடைத் தெருவில் கட்சியினா் புதுவை மாநில பாஜக பட்டியலின பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில அமைப்புப் பொறுப்பாளா் தஸரத் வைலயா, மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில துணைத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.வி. கணபதி, மாவட்ட பொறுப்பாளா் நாகராஜ், தொகுதி பொறுப்பாளா் எஸ். இளங்கோவன், தலைவா் மணிமாறன், மாநில மருத்துவா் அணி இணை ஒருங்கிணைப்பாளா் வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT