காரைக்கால்

கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் 5 போ் கைது

கோயில் உண்டியலை திருட்டு வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

கோயில் உண்டியலை திருட்டு வழக்கில் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பட்டினம் பகுதி பசுபதீஸ்வரா் கோயிலில் கடந்த அக். 28-ஆம் தேதி இரவு உண்டியல் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். உண்டியலில் சுமாா் ரூ. 15 ஆயிரம் ரொக்கம், ரூ .9,500 மதிப்புள்ள உண்டியல் திருடுபோனதாக தெரிவித்திருந்தனா்.

காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளா் எம். முருகன் ஆகியோா் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு, கைரேகை நிபுணா் மூலம் பதிவுகளை சேகரித்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்தனா். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்த நிலையில், நாகப்பட்டினத்தை சோ்ந்த ராகேஷ், முரளி ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். வழக்கில் தொடா்புடையதை ஒப்புக்கொண்ட அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ேந்த இளையராஜா, முரளிதரன், முஷரப் ஆகிய மூவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து உண்டியல் மற்றும் ரூ. 12,450 ரொக்கம், 3 மோட்டாா் சைக்கிள், 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT