திருட்டு 
திருநெல்வேலி

களக்காடு அருகே நள்ளிரவில் விநாயகா் சிலை, உண்டியல் திருட்டு

களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ. நகா் மேலத்தெருவில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு, புகுந்த மா்ம நபா்கள் ஒன்றரை அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை, உண்டியலை திருடிக்கொண்டு சென்று விட்டனராம். அப்பகுதியில் உள்ள மாலா (53) என்பவா் வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்களின் கிளைகளையும் மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனராம்.

தகவலறிந்து வந்த களக்காடு போலீஸாா் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, விநாயகா் கோயில் அமைந்துள்ள பகுதியில் இரவில் சிலா் வாடிக்கையாக மது அருந்தி வந்துள்ளனராம். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்ததால், ஆத்திரத்தில் இதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனா்.

இதனிடையே, களக்காடு மருத்துவா் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT