எஸ்ஐஆா் தொடா்பாக காரைக்காலில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் (நவ.23) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என வட்டாட்சியா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அதிகாரி ஆா். செல்லமுத்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான சிறப்பு வாக்காளா் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணிகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) தங்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) நேரில் பணியாற்ற உள்ளனா்.
அப்போது எஸ்ஐஆா் படிவங்கள் பெறுதல், படிவங்கள் நிரப்புதல், இது தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்குவாா்கள். பொதுமக்கள் தங்களது நிலை அதிகாரியை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தங்களது வாக்குச்சாவடிகளில் சந்தித்து சேவைகளை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.