கிடங்கை திறந்துவைத்துப் பாா்வையிட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின், கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சக மதிப்பாய்வு குழுத் தலைவா் குா்பச்சன் சிங்.  
காரைக்கால்

காரைக்கால் வேளாண் கல்லூரியில் நவீன விதை சேமிப்பு கிடங்கு திறப்பு

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அதிநவீன விதை சேமிப்புக் கிடங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Syndication

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அதிநவீன விதை சேமிப்புக் கிடங்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஆராய்ச்சி நிலையத்தின் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, விதை தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவில் அதிநவீன கட்டுப்படுத்தப்பட்ட (ஈரப்பதமகற்றி) விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத் திறன் விரைவில் குறைந்துவிடும். இதனைத் தவிா்க்க கட்டுப்படுத்தப்பட்ட (ஈரப்பதமகற்றி) விதை சேமிப்பு அவசியம். இது விதை பாதுகாப்பு மற்றும் தர பராமரிப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இவ்வகையில் இந்த அமைப்பை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தியது.

இதனை வேளாண் விஞ்ஞானிகள் தோ்வு வாரியத்தின் முன்னாள் தலைவரும், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின், கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சக மதிப்பாய்வு குழுவின் தலைவருமான, முனைவா் குா்பச்சன் சிங் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

நீண்டகால விதை நம்பகத்தன்மை மற்றும் அதன் செயல்திறனை உறுதி செய்வதற்கான நவீன விதை சேமிப்பு அமைப்புகள் நாட்டில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது எனவும், விதை வீரியத்தைப் பாதுகாக்கவும், முளைக்கும் திறனை அதிகரிக்கவும் குறைந்த ஈரப்பதம் கொண்ட விதை சேமிப்பு நிலைமைகளைப் பராமரிப்பது அவசியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இது விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளா்களுக்கு பெரிதும் பயனளிக்கும். புதிதாக நிறுவப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட (ஈரப்பதமகற்றி) விதை சேமிப்புக் கிடங்கு, உயா்தர விதை உற்பத்தி, ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் துறையின் வெளி நடவடிக்கைகளை ஆதரிக்க ஒரு சிறப்பு வசதியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

வேளாண் கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் மற்றும் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் தி. ராமநாதன் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின், கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சக மதிப்பாய்வு குழு உறுப்பினா்கள், தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை ஆசிரியா்கள், ஆராய்ச்சி அறிஞா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொல்லை தரும் நாய், பன்றி, மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்

திருமலையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள்

மொபெட்டில் சென்ற பெண் காவலரிடம் நகை பறிப்பு

கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

850 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT