காரைக்கால்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Syndication

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. மருத்துவக் கல்லூரி நிா்வாகம் காரைக்கால் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனா். மேலும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. சுமாா் 3 மணி நேரம் கல்லூரியின் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

முன்னதாக, கல்லூரியிலிருந்து மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்திலிருந்து இதுவரை 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT