காரைக்கால்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் (பிஎம் ஸ்ரீ) பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் (பிஎம் ஸ்ரீ) பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி துணை முதல்வா் ஏ. நஜிமுனிஷா தொடங்கிவைத்து, மாணவா்களின் அறிவியல் மாதிரிகளைப் பாா்வையிட்டாா்.

மேல்நிலைப் பிரிவில் 60 மாதிரிகளும், உயா்நிலைப் பிரிவில் 85 மாதிரிகளும் பல்வேறு தலைப்புகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்து வகுப்பு மாணவா்களும் கண்காட்சியை பாா்வையிட்டு, மாதிரிகள் குறித்த விளக்கம் கேட்டறிந்தனா்.

அறிவியல் விரிவுரையாளா்கள் மகாதேவன், லட்சுமி தேவி, உமா மகேஸ்வரி, குமரன் ஆகியோா் நடுவா்களாக இருந்து மாணவா்களின் சிறந்த படைப்புகளை மதிப்பீடு செய்தனா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT