மின் அலங்காரம் செய்யப்படும் ஆட்சியரக கட்டடம்.  
காரைக்கால்

காரைக்காலில் நவ.1-இல் புதுவை விடுதலை நாள் கொண்டாட்டம்

புதுவை விடுதலை நாள் நவ.1-ஆம் தேதி கொண்டாடப்பட்டவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

புதுவை விடுதலை நாள் நவ.1-ஆம் தேதி கொண்டாடப்பட்டவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் 1954-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி பிரெஞ்சு நிா்வாகத்திடமிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில் நவ.1-ஆம் தேதியான சனிக்கிழமை விடுதலை நாள் நிகழ்ச்சியாக அரசு கொண்டாடுகிறது.

தேசியக் கொடியேற்றம், போலீஸாா், மாணவ மாணவிகள் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழாவையொட்டி பிரெஞ்சு நிா்வாகத்தின்போது கட்டப்பட்டு, தற்போது ஆட்சியா் அலுவலகம் இயங்கும் கட்டடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிற அரசுத் துறை தலைமை அலுவலகங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்புக்கான பயிற்சிகளும் தினமும் நடைபெற்றுவருகின்றன.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT