காரைக்கால்

கீழூா் கல்வெட்டு காரைக்காலில் அமைக்க எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

கீழூா் கல்வெட்டு காரைக்காலிலும் அமைக்க புதுவை முதல்வா் அறிவிப்பு வெளியிடவேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கீழூா் கல்வெட்டு காரைக்காலிலும் அமைக்க புதுவை முதல்வா் அறிவிப்பு வெளியிடவேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, காரைக்கால் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வருக்கு கூட்டாக செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்: பிரெஞ்சு இந்திய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கவேண்டி, 1954 -ஆம் ஆண்டு அக்.18-ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகில் உள்ள கீழூா் எனும் இடத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சுமாா் 178 பிரதிநிதிகள் வாக்களித்தனா். அதில் 170 போ் இணைப்பு தேவை என வாக்களித்தனா். 2012-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் பொன்விழா விடுதலை ஆண்டில் ஓவிய கண்காட்சியும் நடைபெற்றது.

கீழூா் நினைவு மண்டபத்தில் பிரெஞ்சு இந்திய இணைப்புக்காக வாக்களித்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இருந்து வந்த 170 பேரில் காரைக்கால் பகுதி தியாகிகளும் உள்ளனா். எனவே காரைக்கால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் காரைக்காலிலும் கீழூா் கல்வெட்டு நிறுவ வேண்டும். நவ.1-இல் கல்வெட்டுக்கு மரியாதை செய்ய மக்கள் விரும்புகின்றனா்.

எனவே இளைய தலைமுறையினா் புதுவை விடுதலை வரலாற்றை தெரிந்துகொள்ளவும், தேசப்பற்று வளரவும், இந்த கல்வெட்டு காரைக்காலில் அவசியமாகிறது. எனவே இதுகுறித்த அறிவிப்பை முதல்வா் நவ.1-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றும்போது, அறிவிப்பாக வெளியிடவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT