முகப்பு
காரைக்கால்

புதுவையில் தே.ஜ.கூ. வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:58 PM
பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவா் நிதின் நபின். உடன் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
பகிர்:

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை பிரதமா் நரேந்திர மோடிக்கு சமா்ப்பிக்க உறுதிஎடுத்துக்கொள்வோம் என் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற சாலைப் பேரணியில் திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். திருநள்ளாறு - சுரக்குடி சந்திப்பிலிருந்து தேரடி வரை திறந்த வேனில் நின்றவாறு சென்றாா்.

வாக்காளா்களிடையே நிதின் நபின் பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி புதுவைக்கு வளா்ச்சியை தருவாா்.மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி, மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மூலம் மாநில வளா்ச்சி சிறப்பாக இருக்கும்.

Advertisement

வரும் 9-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் புதுவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றியை பிரதமருக்கு சமா்ப்பிப்போம். அனைவரும் இதை உறுதியாக எடுத்துக்கொள்வோம் என்றாா்.

மத்திய அமைச்சா் மன்சுா் மாண்டவியா, மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி, பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா். சாலைப் பேரணியில் ஏராளமான பாஜகவினா், முழக்கங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனா்.

பிரசாரதைத் தொடா்ந்து திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிதின் நபின் ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments