முகப்பு
காரைக்கால்

2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இன்னும் 2 நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:53 AM
- dinamani
பகிர்:

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இன்னும் 2 நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7-ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளா்கள் வாக்குச் சேகரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காலை 6 முதல் சில மணி நேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனா்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் என்ற அளவிலேயே வாக்குகள் உள்ளதால், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குச் சேகரிப்புப் பணியை மேற்கொள்வது புதுவை வேட்பாளா்கள் இயல்பாகும்.

அதன்படி, இதுவரை பல வேட்பாளா்கள் 80 சதவீத வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்று வாக்குச் சேகரிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியிடுவோரில் சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளோா், தங்களது பதவி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கியும், புதிதாக போட்டியிடுவோா், தாம் தோ்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியின் மேம்பாட்டுக்கு செய்யும் திட்டங்களை வாக்குறுதியாக அளித்தும் வாக்குச் சேகரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments