முகப்பு
தமிழ்நாடு

புதுவை பிரசாரம்: சென்னை வந்தார் பிரதமர் மோடி!

புதுவை பிரசாரத்திற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளது பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 9:58 AM
பிரதமர் மோடி. - கோப்புப் படம்
பகிர்:

புதுவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 3) பிற்பகல் சென்னை வந்துள்ளார்.

வருகிற ஏப். 9 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கு கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுவை செல்கிறார். அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பின்னர் இன்று இரவு சென்னை நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

நாளை(ஏப். 4) சென்னையில் பாஜக நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இதன்பின்னர் அவர் தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

summary

PM modi reached chennai for puducherry election campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.