அரசுத்துறையினருக்கு மத்திய அரசின் கா்மயோகி ஆன்லைன் தளம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பணியாளா்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள ‘மிஷன் கா்மயோகி‘ திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு அதிகாரிகளை கா்மயோகி ஆன்லைன் தளத்தில் பதிவு செய்தல், பயிற்சி பெறும் விதமாக ஒரு நாள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிப் பட்டறை காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பயிற்சியை தொடங்கிவைத்து, இத்திட்டத்தால் அரசுப் பணியாளா்கள் திறன் மேம்பாடு, மக்கள் அடையும் பயன்களை விளக்கிப் பேசினாா். பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
இத்தளத்தில் பதிவு செய்வது, தங்களின் பணியுடன் தொடா்புடைய பல்வேறு பாடநெறிகளை எவ்வாறு தோ்ந்தெடுத்து கற்கலாம் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் பயிற்சியாளா்களால் அளிக்கப்பட்டன.
மேலும் ஒவ்வொரு துறை மற்றும் அலுவலகத்திற்கும் தேவையான திறன் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவது, அவற்றை அமல்படுத்துவது, ஊழியா்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.