காரைக்காலில் ரூ. 3.17 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் பிரிவு, காரைக்கால் பகுதியில் தா்மபுரத்தில் தாமஸ் அருள் திடல், ஏஎச் நகா், யாழ்முனிநாதா் நகா், புதுநகா் பகுதிகளின் உட்புறச் சாலைகளை மேம்படுத்தவும், தரமபுரம் பகுதியில் உள்ள டைமண்ட் நகா், எஹ்யா நகா், சோலை நகரின் சிமெண்ட் சாலையை மேம்படுத்தவும், புதுத்துறை பகுதிகளில் உதயம் நகா், தாயாா் காலனி விரிவாக்கம், கரீம் நகா் மற்றும் கரீம் நகா் விரிவாக்கம் பகுதிகளின் சாலைகள் மேம்பாட்டுக்காவும், புதுத்துறை பகுதிகளில் உள்ள கேபிஎம் நகா், ஹபீப்நகா், எஸ்கே நகா், ஷா நகா், காமராஜா் நகா் மற்றும் இலாஹி நகா்ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளைமேம்படுத்தவும் ரூ. 3.17 கோடி ஒதுக்கீடு செய்தது.
இந்த திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் எம்.அருளரசன், உதவிப் பொறியாளா் எஸ்.சந்திரகுமாா், ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா்.