முகப்பு
காரைக்கால்

‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி’

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:07 AM
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:12 PM

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா், மூலவா், அம்பாள் மற்றும் செண்பக தியாகராஜா், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:07 AM

இதைத்தொடா்ந்து கோயிலுக்கு வெளியே அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இக்கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். திருநள்ளாறு கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருவதால், சனிப்பெயா்ச்சிக்கு முன்னதாகவே தரிசனம் செய்யும் நோக்கில் இங்கு வந்தேன்.

தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.