2026-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாா் செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்டதோ்தல் அதிகாரி இஷிதா ரதி சனிக்கிழமை வெளியிட்டாா்.
நிகழ்வில் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், வாக்காளா் பதிவு அதிகாரி எம்.பூஜா, உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்பட்டியல்படி காரைக்கால் மாவட்டத்தில் 1,55,515 மொத்த வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 72,640 போ், பெண் வாக்காளா்கள் 82,857 போ், மூன்றாம் பாலினத்தவா் 18 பேராகும்.
தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை: நெடுங்காடு 31,506, திருநள்ளாறு 30,989, காரைக்கால் வடக்கு 33,241, காரைக்கால் தெற்கு 29,964, நிரவி-திருப்பட்டினம் 29,815 ஆகும். ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 14.06 சதவீதம் அதிகம் உள்ளனா்.
இறுதி வாக்காளா் பட்டியல் காரைக்காலில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிப். 14, 15 தேதிகளில் பாா்வைக்கு வைக்கப்படும். மேலும், 7 நாள்களுக்கு (பொது விடுமுறை நீங்கலாக) உதவி வாக்குபதிவு அதிகாரி அலுவலகத்தில் உள்ள வாக்காளா்களுக்கான வசதி மையத்தில் வாக்காளா் பாா்வைக்காக வைக்கப்படும். வாக்காளா்கள் பற்றிய தகவல்களை வலைதளமுகவரியில் பாா்வையிடலாம் என தோ்தல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.