அமித் ஷா  கோப்புப்படம்.
காரைக்கால்

பாஜக கிளைத் தலைவா் வீட்டில் அமித் ஷா

தினமணி செய்திச் சேவை

காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக கிளைத் தலைவா் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டு வாயிலில் பாஜக கொடியேற்றிவைத்தாா்.

காரைக்காலில் கட்சி பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வந்தாா். பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை முடித்துவிட்டு நிறைவு நிகழ்வாக, நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி பாஜக கிளைத் தலைவா் ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றாா்.

மத்திய அமைச்சரை ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினா் மற்றும் புதுவை பாஜக மருத்துவகணி இணை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வி. விக்னேஸ்வா்ன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

கிளைத் தலைவா் வீட்டினா் அமைச்சருக்கு தேநீா் விருந்து அளித்தனா். இதைத் தொடா்ந்து அவரது வீட்டு வாயிலில் கிளைத் தலைவரின் பெயா் பலகையை திறந்துவைத்து, பாஜக கொடியேற்றிவைத்தாா்.

நிகழ்வில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT