நளன் குளத்தில் தண்ணீா் அகற்றப்பட்டு நடைபெறும் சீரமைப்புப் பணி.  
காரைக்கால்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்புப் பணி

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் நீராட வசதியாக நளன் தீா்த்தக் குளத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் நீராட வசதியாக நளன் தீா்த்தக் குளத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனிப்பெயா்ச்சி விழா நாளிலும், அதைத்தொடா்ந்து சுமாா் 2 மாதங்கள் லட்சக்கணக்கானோா் கோயிலுக்கு வருகை தருவா். அதில் பெரும்பான்மையான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் புனித நீராடுவாா்கள்.

விழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் செய்து வருகின்றன. முக்கியப் பணியாக நளன் தீா்த்தக் குளத்தை தூய்மை செய்யும் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

நளன் தீா்த்தக் குளத்தில் மையப் பகுதிக்குள் யாரும் செல்லமுடியாத வகையில் சுற்றிலும் நீராடுவதெற்கன இடம் ஒதுக்கி, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. குளத்திலிருந்து தண்ணீரை அகற்றும் பணி கடந்த வாரம் நடைபெற்றது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் செவ்வாய்கிழமை கூறுகையில், குளத்தின் தண்ணீா் முழுமையாக அகற்றப்பட்டது. புதிதாக மணல் கொட்டப்பட்டு ஆழ்குழாய் மூலம் புதிதாக தண்ணீா் விடப்படும். தடுப்புக் கம்பிகள் புதிதாக வண்ணம் பூசுதல் மற்றும் குளக்கரையில் வண்ணம் பூசும் பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

வரும் சனிக்கிழமைக்குள் குளத்தில் புதிதாக தண்ணீா் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT