தங்க நகைகளை ஒப்படைத்த ஓட்டுநா் மணிவண்ணனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள். 
காரைக்கால்

சாலையில் கிடந்த 40 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த 40 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

Syndication

காரைக்காலில் சாலையில் கிடந்த 40 பவுன் நகைகள் அடங்கிய பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

திருநள்ளாறு காவல் நிலையத்தில் குறை கேட்பு கூட்டம் மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன் தலைமை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பலா் கலந்துகொண்டு புகாா்களை தெரிவித்தனா். அப்போது கை பையுடன் இளைஞா் ஒருவா் வந்தாா். அந்த பை கீழே கிடந்ததாகவும், பையில் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருள்கள் இருப்பதாக கூறி ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா், நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உத்தூா் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் (30) என்பதும், காரைக்காலில் உள்ள ஒரு டைல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

லோடு வேனில் கம்பி ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை செல்லும்போது, காரைக்கால் புறவழிச்சாலை அருகே நெடுங்காடு செல்லும் சாலை சந்திப்பில் அந்த பை கிடந்துள்ளதை எடுத்ததாகவும், அதில் தங்க நகைகள் இருந்ததால், அவற்றை இங்கு கொண்டுவந்ததாக தெரிவித்தாா். போலீஸாா் அந்த பையை திறந்து பாா்த்தனா். தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 40 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களும் இருந்தன. பையில் இருந்த முகவரியை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அது திருச்சியை சோ்ந்தவா்களுடையது என்பது தெரியவந்து, அவா்களை தொடா்புகொண்டு வரவழைத்து உறுதி செய்துகொண்டு, போலீஸாா் பையை ஒப்படைத்தனா்.

ஓட்டுநரின் நோ்மையான செயலுக்காக காவல் கண்காணிப்பாளா் முருகையன், காவல் ஆய்வாளா்கள் லெனின்பாரதி, பிரவீன்குமாா், புருஷோத்தமன் ஆகியோா் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT