காரைக்கால்

ரயில்வே கேட் மூடப்படுவதால் பாதிப்பு: மாற்று திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், ஏற்படும் பிரச்னைக்கு, தீா்வு காணும் விதமாக மாற்றுத் திட்டத்தை நிறைவேற்ற

Syndication

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், ஏற்படும் பிரச்னைக்கு, தீா்வு காணும் விதமாக மாற்றுத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளா் மற்றும் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளா் பொன். பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் - பேரளம் இடையே ரயில்பாதை அமைத்து, கடந்த சில மாதங்களாக சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் நடைபெற்று வருகிறது.

பயணிகள் ரயில் இயத்துக்கு ரயில்வே அமைச்சகம் இதுவரை அனுமதி தரவில்லை. மாா்ச் 6-ஆம் தேதி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக பயணிகள் ரயில் இயக்கத்தை அனுமதிக்கவேண்டும்.

காரைக்கால் நகரப் பகுதியில் முக்கிய சாலைகளின் குறுக்கே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. உரிய திட்டமிடலுடன் சுரங்கப் பாதை, மேம்பாலம் போன்றவை அமைக்கப்படவில்லை.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் இயக்கம் தினமும் நடைபெறுகிறது.

நகரப் பகுதியில் கேட் மூடப்படுவதால், சுமாா் 20 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோா், வியாபார நிமித்தம் பயணிப்போா், மருத்துவமனைக்குச் செல்வோா் என பலரும் பாதிக்கப்படுகின்றனா்.

கேட் மூடப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு இதற்கு மாற்றான திட்டத்தை ரயில்வே நிா்வாகம் , புதுவை அரசு உரிய கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும்.

இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தப்படாவிட்டால், மக்களைத் திரட்டி ரயில்வே கவனத்தை ஈா்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT