காரைக்கால்

ஓஎன்ஜிசி பள்ளியில் தேசிய இளைஞா் தின போட்டிகள் பரிசளிப்பு

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் தேசிய இளைஞா் தினத்தையொட்டி பல்வேறு பள்ளி மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Syndication

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் தேசிய இளைஞா் தினத்தையொட்டி பல்வேறு பள்ளி மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளையொட்டி 46 பள்ளிகள் பங்கேற்புடன் அண்மையில் விளையாட்டு, இசை, அறிவியல் மற்றும் கலை, கைவினை கண்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான திங்கள்கிழமை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா கலந்துகொண்டாா். ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி தாளாளா் கண்ணன், துணைத் தாளாளா் ரெங்கையன் மற்றும் முதல்வா் காா்த்திகேயன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளா் உள்ளிட்டோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை!

மனைவியை தாக்கிய கணவா் கைது

இலையூரில் சமத்துவப் பொங்கல் விழா

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT