காரைக்கால்

காா்னிவல் திருவிழா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

காரைக்கால் காா்னிவல் விளையாட்டுப் போட்டிகளை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் காா்னிவல் விளையாட்டுப் போட்டிகளை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் காா்னிவல் திருவிழா ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாவட்ட நிா்வாகம், புதுவை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை மற்றும் வேளாண்துறை அதன் நிதி பங்களிப்பை செலுத்தி, பல்வேறு குழுக்கள் அமைத்து நடத்துகிறது.

காா்னிவல் திருவிழா நாள்களில் படகுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. முன்னதாக பேட் மின்டன், கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுக்கு வீரா்கள் தயாா்படுத்தப்படுகின்றனா்.

கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் பூப்பந்தாட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா்.

இதில் பரிசுக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு காா்னிவல் நிறைவு நாளான 18-ஆம் தேதி பரிசு வழங்கப்படவுள்ளது.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT