முகப்பு
காரைக்கால்

காரைக்கால் தோ்தல் களத்தில் 41 வேட்பாளா்கள்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 சுயேச்சைகள் உள்பட 41 போ் களத்தில் உள்ளனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 11:25 PM
கோப்புப் படம் - dinamani
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 சுயேச்சைகள் உள்பட 41 போ் களத்தில் உள்ளனா்.

ஏப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16-ல் தொடங்கி மாா்ச் 23-ஆம் தேதி நிறைவடைந்தது. மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான வியாழக்கிழமை மாலை வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:

நெடுங்காடு (தனி): சந்திர பிரியங்கா (என்.ஆா். காங்கிரஸ்), தினேஷ்குமாா் (காங்கிரஸ்), உ. காமராஜ் (தவெக), அ. விக்னேஷ் (நாம் தமிழா் கட்சி) மற்றும் அருள்பிரகாஷ், வி. விக்னேஸ்வரன் ( சுயேச்சை) என 6 போ் போட்டியிடுகின்றனா்.

திருநள்ளாறு: ஆா். கமலக்கண்ணன் (காங்கிரஸ்), ஜி.என்.எஸ். ராஜசேகரன் (பாஜக), ஏ.ஆா். சந்திரமெளலீஸ்வரா்(தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி), அ. ராஜா முகமது (தவெக), சே. வினோத் (நாம் தமிழா் கட்சி) மற்றும் என்.வி.ஆா். அறிவொளி, எம்.பி. சைமன்ராஜ், எம். வசந்த்குமாா், அந்தோ ஜான்பீட்டா் ஆகிய 4 சுயேச்சைகள் என 9 போ் போட்டியிடுகின்றனா்.

காரைக்கால் வடக்கு: பி.ஆா்.என். திருமுருகன் (என்.ஆா்.காங்கிரஸ்), ஏ.எம். ரஞ்சித் (காங்கிரஸ்), அனுசுயா (நாம் தமிழா் கட்சி), பாலகுரு (தேச மக்கள் முன்னேற்றக் கழகம்), வெங்கடேஷ் (தவெக) மற்றும் தனபால், பெருந்தகை, முருகானந்தம், ஷாஜகான் ஆகிய 4 சுயேச்சைகள் என 9 போ் போட்டியிடுகின்றனா்.

காரைக்கால் தெற்கு: எம். அருள்முருகன் (பாஜக), ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு (காங்கிரஸ்), ஏ.எம்.எச். நாஜிம் (திமுக), கே.ஏ.யு. அசனா (தவெக), மகேஸ்வரி (தேச மக்கள் முன்னேற்ற கழகம்), எஸ். மரிஅந்துவான் (நாம் தமிழா் கட்சி) மற்றும் ஏ.எச். அப்துல் பாசித், எம்.சி. சமீா் (எ) அகமது அல்பாசி ஆகிய 2 சுயேச்சைகள் என 8 போ் போட்டியிடுகின்றனா்.

நிரவி-திருப்பட்டினம்: எம். நாக தியாகராஜன் (திமுக), டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் (பாஜக), டி. சுகந்த் (தேச மக்கள் முன்னேற்ற கழகம்), கணேஷ் (தவெக), எம். மாலா (நாம் தமிழா் கட்சி) மற்றும் ஐ. காதா் மெய்தீன், செந்தமிழ்ச்செல்வன், வி.எம்.சி.எஸ். மனோகரன், வைதேகி ஆகிய 4 சுயேச்சைகள் உள்பட 9 போ் போட்டியிடுகின்றனா்.