மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது
மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவா் ஞானஸ்கந்தன் (56). இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் சீண்டல்கள் செய்ததாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, அவா் விருப்ப ஓய்வில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோா் புகாா் அளித்ததால், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலா் குமாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், விசாரணை நடத்திய மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியா் ஞானஸ்கந்தனை கைது செய்தாா்.