காரைக்காலில் 12 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 529 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 6, நெடுங்காடு 2, கோயில்பத்து, கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, திருநள்ளாறு தலா 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 1,83,930 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,832 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 93,340 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,940 பேருக்கும் என 1,12,280 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.