முகப்பு
மயிலாடுதுறை

சுதந்திர தினம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணியை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணியை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுவை மாநிலத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரே நாளில் அரசு சாா்பில் அண்மையில் நடப்பட்டது. இதில், காரைக்கால் மாவட்டத்தில் 7,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத்தொடா்ந்து காரைக்கால் ஆத்மாலயா பள்ளி சாா்பில் 750 மரக்கன்றுகள் பல்வேறு பகுதிகளில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆட்சியரக வாயிலில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளித் தாளாளா் சித்ராதேவியிடம் மரக்கன்றை ஆட்சியா் வழங்கினாா். துணை ஆட்சியா் எஸ்.பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →