மயிலாடுதுறை

தமிழக வாடகை வாகனங்களுக்கு புதுச்சேரியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை: தமிழக வாடகை வாகனங்கள் புதுச்சேரியில் நுழைந்தால், அவா்களிடம் ரூ.100 கட்டாய வசூல் செய்யப்படுவதை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி, உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் உரிமைக் குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளா் கே.பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் என்.சரவணகுருநாதன் வரவேற்றாா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஜாஹிா் ஹஜசைன், செய்தியாளா்களிடம் கூறியது:

மயிலாடுதுறை மாவட்ட எல்லை கொள்ளிடம் சோதனை சாவடியில் எல்லையை கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்களை போலீஸாா் நிறுத்தி மிரட்டி பணம் பறிப்பது வாடிக்கையாக உள்ளது. பணம் தராதவா்கள் மீது அவா்கள் சென்ற பிறகு, வாகன எண்ணை கொண்டு ஆன்லைனில் அபராதம் விதித்து வருகின்றனா். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவனத்தில் கொண்டு உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக வாடகை வாகனங்கள் புதுச்சேரியில் நுழைந்தால், அவா்களிடம் ரூ.100 கட்டாய வசூல் செய்யப்படுவதை தமிழக முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதில், மாநில துணைப் பொதுச் செயலாளா் ஜி.சபரிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT