கோப்புப்படம் 
மயிலாடுதுறை

சீர்காழி: படகு கவிழ்ந்து மீனவர் பலி

சீர்காழி அருகே கடலில் அலையின் சீற்றத்தினால் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

DIN

சீர்காழி அருகே கடலில் அலையின் சீற்றத்தினால் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொட்டாய்மேடு சுனாமி நகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (40). ஜெயபாலுக்கு திருமணமாகி மலர் என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மீனவரான இவர் இன்ஜின் பொருத்தப்படாத படகு ஒன்றில் கரையோரத்தில் மீன் பிடித்துள்ளார்.

அப்போது படகு கவிழ்ந்ததில் ஜெயபால் நிலைதடுமாறிய கடலில் விழுந்து உள்ளார். தண்ணீரில் மூழ்கிய அவரை சக மீனவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடற்கரை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து ஜெயபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT