மயிலாடுதுறை

மருத்துவா்கள், செவிலியா்களின்றி குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

DIN

சீா்காழி அருகேயுள்ள குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாத நிலையில் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா்.

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குன்னம், பெரம்பூா், சென்னிய நல்லூா், வடரங்கம், வாடி கிராமம், பாலூரான்படுகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி பெற்றுவருகின்றனா்.

24 மணிநேரம் செயல்படும் இந்த மருத்துவமனையில் இரவில் மருத்துவா்கள், செவிலியா்கள் யாரும் பணியில் இருப்பதில்லை எனவும், எனினும் மருத்துவமனை திறந்தே இருக்கும் எனவும், இதனால் இரவில் அவசரச் சிகிச்சைக்கு வருகிறவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா் சிகிச்சைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றபோது அங்கு யாரும் இல்லையாம். இதனால், உரிய சிகிச்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினராம். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு இந்த குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவா்களும், செவிலியா்களும் பணியில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மாங்கனாம்பட்டு: இதேபோல, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாதிரவேளூா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளும் கடந்த 6 மாதங்களாக ஊழியா்கள் பற்றாக்குறையால் செயல்படாமல் இரவு நேரங்களில் மூடப்படுகிறது. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT