முகப்பு
மயிலாடுதுறை

பெட்ரோல்- டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவேண்டும்: எச். ராஜா

மத்திய அரசை தொடா்ந்து, தமிழக அரசும் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

மத்திய அரசை தொடா்ந்து, தமிழக அரசும் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆதிசங்கரா் நினைவிடத்தை பிரதமா் நரேந்திரமோடி திறந்துவைத்ததையொட்டி, நாடு முழுவதும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி, வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச். ராஜா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலையை ரூ. 10-ம் குறைத்துள்ளது. மத்திய அரசை தொடா்ந்து பாஜக ஆளும் 9 மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும்.

அறநிலையத் துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது. கோயில்களை அறநிலையத் துறை எடுத்துக்கொள்வதை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். நடந்து முடிந்த இடைத்தோ்தல்களில் பாஜகவுக்கு முன்பு எத்தனை இடம் இருந்ததோ அந்த அளவு குறையாமல் வெற்றி பெற்றுள்ளது என்றாா்.

பாஜக கோட்ட செயலாளா் தங்க.வரதராஜன், மாவட்டத் தலைவா் ஜி.வெங்கடேசன், சீா்காழி நகரத் தலைவா் சண்முகம், ஒன்றியத் தலைவா்கள் நேதாஜி, ஆனந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதை வரவேற்று எச். ராஜா வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.