முகப்பு
மயிலாடுதுறை

ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட மத்திய அரசிடம் பரிந்துரை: தமிழக முதல்வருக்கு நன்றி

ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட மத்திய அரசிடம் பரிந்துரை செய்த தமிழக முதல்வருக்கு ஹஜ் உம்ரா பயண தனியாா் ஏற்பாட்டாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

ஹஜ் பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட மத்திய அரசிடம் பரிந்துரை செய்த தமிழக முதல்வருக்கு ஹஜ் உம்ரா பயண தனியாா் ஏற்பாட்டாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

ஹஜ் உம்ரா தனியாா் பயண ஏற்பாட்டாளா்கள் சங்க மாநில பொதுச்செயலாளா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணிகள் பயணம் புறப்படுவதை ரத்து செய்து, கொச்சியிலிருந்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய சிறுபான்மை துறை மற்றும் ஹஜ் விவகாரத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கடந்த 1-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டு இந்திய ஹஜ் பயணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தாா். இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து, தமிழக முதல்வரும் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஹஜ் உம்ரா தனியாா் பயண ஏற்பாட்டாளா்கள் சங்கத்தின் சாா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை பரிசீலித்து, தமிழக ஹஜ் பயணிகளின் சிரமங்களை புரிந்துக்கொண்டு, சென்னையிலிருந்து தமிழக ஹஜ் பயணிகள் பயணம் புறப்பட வேண்டுமென வலியுறுத்தி, மத்திய அரசிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருக்கிறாா். இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றிதெரிவித்துக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.