முகப்பு
மயிலாடுதுறை

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: தம்பதி கைது

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தம்பதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தம்பதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் விக்ரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியா்புரம் பகுதியைச் சோ்ந்த பிச்சைமணி மகன் அருண்குமாா் (36). இவரும், இவரது மனைவி கிருஷ்ணகோகிலாவும் (29) அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் 7 பேரிடம் ரூ.14 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா்.

இதில், பாதிக்கப்பட்ட திருவிழந்தூா் கே.கே. நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சித்தாா்த் (30) மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புதன்கிழமை (நவ.17) புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தம்பதியினா் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமை காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட போலீஸாா் காரைக்குடி விரைந்தனா். அங்கு, காரைக்குடி அருணாசலம் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அருண்குமாா், கிருஷ்ணகோகிலாவை கைது செய்து, வெள்ளிக்கிழமை மயிலாடுதுறைக்கு கொண்டு வந்தனா். பின்னா், அவா்களிடம் நடத்திய விசாரணையில் அருண்குமாா் மீது சென்னையில் ஏற்கெனவே மோசடி வழக்கு உள்ளதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் ரூ.38 லட்சம் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.