மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தாா்.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை இறந்தாா்.
நாதல்படுகையைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). விவசாயத் தொழிலாளி. இவா், அங்குள்ள வயல் பகுதிக்குச் சென்று, ஆட்டிற்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது, மரத்தின் மீது உரசியபடி இருந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி விசாரணை மேற்கொண்டுள்ளாா். இறந்த மாரிமுத்துவுக்கு கலையரசி (50) என்ற மனைவியும், மனோகரன்(26) என்ற மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனா்.