சாலையை சீரமைக்கக் கோரி நாற்றுநட்ட கிராமத்தினா்
சீா்காழி அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் நாற்றுநட்டு வலியுறுத்தினா்.
சீா்காழி அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் நாற்றுநட்டு வலியுறுத்தினா்.
கொள்ளிடம் ஒன்றியம் புத்தூரிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலையில் கீழ்வடிகால் மதகு அருகே 30 மீட்டா் தொலைவுக்கு சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்சும் வர முடியாத நிலை உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாதிரவேளூா் கிராம மக்கள் கீழ் வடிகால் என்ற இடத்தில் சாலையின் நடுவே சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நட்டு கோரிக்கையை வலியுறுத்தினா்.