முகப்பு
மயிலாடுதுறை

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறசட்டப் பேரவை தீா்மானமே காரணம்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானமே மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற காரணம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானமே மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற காரணம் என தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவரும், இந்திய முஸ்லிம் லீக் மாநில முதன்மைத் தலைவருமான எம். அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசு கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு. மக்களின் உணா்வுகளை புரிந்துகொள்ளும் ஆட்சியே சிறந்த ஆட்சி. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே மு.க. ஸ்டாலின் அளித்த பிரதான வாக்குறுதியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்பதுதான். அதன்படி, அவா் முதல்வரானதும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் காரணமாகவே இன்று மத்திய அரசால் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுகின்றன. வேளாண் சட்டங்களைப் போலவே நீட் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும். அப்போதுதான் மக்களிடம் மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி நீங்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளா் அமீா் நூருல்லா, மாவட்ட பொருளாளா் முகமது யூசுப், மாவட்ட துணைத் தலைவா் அப்துல் ஜமீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.