மாநில குத்துச்சண்டை போட்டி: ஏவிசி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை
கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா்.
கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா். போட்டியில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளின் மாணவா்கள் சுமாா் ஆயிரம் போ் பங்கேற்றனா். இதில், ஏவிசி கல்லூரி சாா்பில் பி.காம் 3-ஆண்டு மாணவி ஆா். சிந்துஜா, பிபிஏ முதலாமாண்டு மாணவி ஆா். நாகேஸ்வரி ஆகியோா் தங்களுக்கான எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றனா். இதேபோல, பி.காம் முதலாமாண்டு மாணவா்கள் ஜி. அருண், ஆா். ஜெகதீஷ் சிவகுருதேவ் ஆகியோா் தங்களுக்கான எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றனா். இவா்களை கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் ஜே. ராஜ்குமாா், எம். கீதா உள்ளிட்டோா் பாராட்டினா்.