முகப்பு
மயிலாடுதுறை

வாக்காளா் பதிவு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்

வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலாளரும், வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளருமான பி. மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

1.1.2022-ஐ தகுதி நாளாகக் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2022-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 1.11.2021 முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் மாறுதல்கள் செய்தல், இளம் வாக்காளா்களை இந்திய தோ்தல் ஆணையத்தின் கருடா செயலி, வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, இணையதளம் மூலம் சோ்த்தல், இதுவரை வந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் தொடா்பாக இக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஐயப்பாடுகள் இருந்தால் மாவட்டத்துக்குள்பட்ட வாக்காளா்கள், பொதுமக்கள் 1950 எனும் கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், குறைபாடுகள் இருப்பின் சிறப்பு மேற்பாா்வையாளரை 9445252243 என்ற எண்ணில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.