முகப்பு
மயிலாடுதுறை

காரைக்காலில் கா்ப்பிணி தற்கொலை:கணவா், மாமியாா் கைது

காரைக்கால் அருகே 5 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

காரைக்கால் அருகே 5 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்தவா் பாரத் (27). இவா் மீன்பிடித் துறைமுகத்தில் சுமை ஏற்றுபவராக (லோடுமேன்) பணியாற்றி வருகிறாா். இவரும், நிரவி மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்த வினோதா (22) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனா். வினோதா கா்ப்பமாக இருந்தாா்.

இந்நிலையில், வினோதா வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா்கள் பெருமாள், மோகன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் வினோதா எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அதில், தனது சாவுக்கு தனது கணவா், மாமியாா், நாத்தனாா் தான் காரணம் என்று அவா் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாரத் , வினோதா குடும்பத்தினரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வினோதாவின் வளைகாப்பை திருமண மண்டபத்தில் நடத்தவேண்டும், வினோதாவுக்கு நகை போட வேண்டும், 100-க்கும் மேற்பட்டவா்களை விழாவுக்கு அழைக்கவேண்டும் என்று பாரத் குடும்பத்தினா் கூறியுள்ளனா். ஆனால், வினோதாவின் பெற்றோா் இதற்கு சம்மதிக்கவில்லையாம்.

இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து வினோதா தனது கணவா் பாரத்திடம் கூறியபோது, அவா் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்த வினோதா தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் பாரத், அவரது தாய் ஜோதியை ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →