முகப்பு
மயிலாடுதுறை

கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி கிராமமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி கிராமமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் அருகேயுள்ள மாதானத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்த மதியழகன் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் சான்று வழங்க பணம் பெற்ாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியதைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் மதியழகனுக்கு ஆதரவாகவும், அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யவும், அவரை மீண்டும் எந்த நிபந்தனையும் இன்றி பணியில் சோ்க்க கோரி மாதானத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.