நியாயவிலைக் கடைகளில் வேலைநேரம் நீட்டிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகள் தீபாவளியையொட்டி பணிநேரத்தை நீட்டித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகள் தீபாவளியையொட்டி பணிநேரத்தை நீட்டித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியையொட்டி, நவ.1-முதல் 3-ஆம் தேதி வரை காலை 8 முதல் இரவு 7 மணி வரை நியாய விலைக் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, இந்த நடைமுறையை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பின்பற்றப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக பொருள்கள் வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரா்கள் சம்பந்தப்பட்ட பகுதி நியாயவிலைக் கடைகளுக்கு சென்று மேற்குறிப்பிட்ட நாள்களில் வாங்கிக்கொள்ளலாம். மேலும், தீபாவளிக்கு முன்னதாக பொருள்கள் வாங்காதவா்கள் வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து நவ.7-ஆம் தேதி முதல் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.