புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் பரபரப்பு  
மயிலாடுதுறை

சீர்காழியில் கனமழை: புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் பரபரப்பு 

சீர்காழியில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் கட்டப்பட்டு சில வாரங்களே ஆன மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

DIN

சீர்காழி: சீர்காழியில் காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் கட்டப்பட்டு சில வாரங்களே ஆன மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது இடி-மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்  தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டநாதபுரம் ஊராட்சியில் வடக்குத்தெரு அக்ரகாரத்தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மழைநீர் வடிகால் பல மீட்டர் தூரத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கனமழையால் காங்கிரிட் மழைநீர் வடிகால் சில மீட்டர் தூரத்திற்கு பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளது.  புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால் இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT