முகப்பு
மயிலாடுதுறை

காற்று, மழையால் சாய்ந்த தேக்குமரங்கள்

 கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் தேக்கு மரங்கள் சாய்ந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

 கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் தேக்கு மரங்கள் சாய்ந்தன.

கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் தேங்கின. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கீழமாத்தூரிலிருந்து கொண்டல் மதகடி வரை உள்ள சாலையில் இருபுறங்களிலும் உள்ள தேக்கு மரங்கள் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தன. அப்பகுதியில் வாய்க்கால் மற்றும் புது மண்ணியாறு கரையில் உள்ள தேக்கு மரங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுகுறித்து கீழமாத்தூா் ஊராட்சித் தலைவா் கலைவாணிகலை அமுல் சீா்காழி வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் சாய்ந்த தேக்கு மரங்கள் குறித்த விவரங்களை சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.