இராக்கச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு
சீா்காழி அருகே அட்டக்குளம் பகுதியில் உள்ள இராக்கச்சிஅம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகே அட்டக்குளம் பகுதியில் உள்ள இராக்கச்சிஅம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இரண்டுகால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம்வந்து மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், இராக்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.