மயிலாடுதுறை

இலவச கல்வித் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

DIN

மயிலாடுதுறை: இலவச கல்வித் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவா்கள் விண்ணப்பங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் - 30.9.2021-க்குள்ளும், புதிய இனங்களுக்கு 5.11.2021-க்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிடவேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 15.10.2021 முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 14.11.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமா்ப்பிக்கவேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் 16.11.2021 முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 31.12.2021க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமா்ப்பிக்கவேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகவும். இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பம் அரசின் இணையதளத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT