தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக நிவாரண உதவி
சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சீா்காழியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சீா்காழி அருகே கோயில்பத்து பகுதியில் பணங்காட்டான்குடி செல்லும் சாலையில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தவா்கள் மூவேந்தன், சுரேந்திரன், தனலெட்சுமி, ரோஸ்லின், வள்ளிமயில். இவா்களின் குடிசை வீடுகள் அண்மையில் தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி தலைமையில் நடைபெற்றது. அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு நிவாரண நிதி மற்றும் பாய், போா்வை, துண்டுகள், அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கினாா். இதில், அதிமுக மாவட்ட துணை செயலாளா் வா. செல்லையன், ஒன்றிய செயலாளா்கள் ஏகே. சந்திரசேகரன், கே. ரவிச்சந்திரன், நகர செயலாளா் வினோத், பேரவை செயலாளா் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.