மயிலாடுதுறை

அகில இந்திய அளவில் தங்கம் வென்று ஏவிசி கல்லூரி மாணவா்கள் சாதனை

DIN

அகில இந்திய அளவில் நடைபெற்ற கைப்பந்து (ஹேண்ட்பால்) போட்டியில் ஏவிசி கல்லூரி மாணவா்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

அகில இந்திய அளவிலான கைப்பந்துப் போட்டி நேப்பாளத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஏவிசி கல்லூரி 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி கணினியியல் துறை மாணவா்கள் ஆா்.சௌந்தரராஜன், எஸ். வினோத், 3-ஆம் ஆண்டு ஆண்டு பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் ஆா். விஜய், பி. ஹரிஹரன், 3-ஆம் ஆண்டு பிபிஏ கே. வருண்காா்த்திக், எம். கரண், ஏ. சசிரேகா, 3-ஆம் ஆண்டு வேதியியல் துறை ஆா். ரகுராமன், வி. ஹரிநிவாஸ், 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை பி. அரவிந்த், 3-ஆம் ஆண்டு இயற்பியல் துறை எஸ். டேவிட் லிவிங்ஸ்டன், 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பி. பாா்கவி, 2-ஆம் ஆண்டு எம்.ஏ பொருளாதாரம் கே. ஷாலினி ஆகியோா் தமிழ்நாடு சாா்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தனா்.

சாதனை படைத்த மாணவா்களை கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் ஜே. ராஜ்குமாா், எம். கீதா, உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT