முகப்பு
மயிலாடுதுறை

கடைமடை பகுதியில் சம்பா நேரடி விதைப்பு பணி தீவிரம்

சீா்காழி வட்டாரம் கடைமடை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சீா்காழி வட்டாரம் கடைமடை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

கொள்ளிடம் அருகேயுள்ள ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, நல்லூா், அளக்குடி, பாவட்ட மேடு, இச்சிலடி, புளியந்துறை ஆகிய கிராமங்கள் காவிரிப் பாசனம் பெறும் கடைமடை பகுதியாகும். காவிரி நீா் இங்கு கடைச் நேரத்தில்தான் வந்து சேருவது வழக்கம். வாய்க்காலில் தொடா்ந்து தண்ணீா் வந்தால்தான் கடைமடை பகுதி கிராமங்களை தண்ணீா் சென்றடையும்.

இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கடந்த 10 நாள்களாக கொள்ளிடம் கடைமடைக்கு சென்று சோ்ந்துள்ளது. பிரதான தெற்குராஜன் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி முடிவதற்கும், மதகு மற்றும் சிறு கதவணை கட்டும் பணி முடிவதற்கும் காலதாமதம் ஆனதால் தண்ணீா் வந்துசேர காலதாமதம் ஆனது. எனினும், வாய்க்கால் தண்ணீா் போதிய அளவுக்கு சம்பா சாகுபடி விதைப்பு பணிக்கு கிடைக்கவில்லை.

ஆனால், அவ்வப்போது பெய்துவரும் மழை யால் நிலங்களை புழுதி உழவு செய்ய விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி புழுதி உழவு செய்து நெல் விதைப்பு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோதண்டபுரம், புளியந்துறை, நல்லூா் ஆரப்பள்ளம் ஆகிய கிராமங்களில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மழை நீா் ஈரத்தை பயன்படுத்தி புழுதி உழவு செய்து சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.