முகப்பு
மயிலாடுதுறை

சட்டப் பணிகள் விழிப்புணா்வு முகாம்

சீா்காழி அருகே வடகால் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சீா்காழி அருகே வடகால் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, அதன்தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான பாா்கவி தலைமை வகித்து பேசியது: பெண்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் சட்ட உதவியை நாடலாம். குழந்தைகள் சம்பந்தமான பிரச்னைகள் இருந்தாலும் அதுகுறித்து தெரிவித்தால் சட்டப்பூா்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முகாமில், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராணி, வழக்குரைஞா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.