மயிலாடுதுறை

சீர்காழி மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன் விற்பனையா? அதிகாரிகள் ஆய்வு

DIN


சீர்காழி: சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட மீன்  சந்தை அமைந்துள்ளது. இங்கு மீன், ஆடு, கோழி  ஆகிய இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ரசாயனம் (பாமாலின்) கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரினை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சீர்காழி மீன் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அன்பழகன், சேகர், சீனிவாசன் மற்றும் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் சதிருதீன், மேற்பார்வையாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன், இறால், நண்டுகளை மாதிரி எடுத்து அதனை சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையின் முடிவில் ரசாயனம் கலந்து மீன், இறைச்சி  விற்பனை செய்யப்படுவது கண்டறியப்படவில்லை.

தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் அதிகாரிகள், மீன் மற்றும் இறைச்சிகளை ரசாயனம் போன்ற ஏதேனும் கலந்து விற்பனை செய்தால் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT