முகப்பு
மயிலாடுதுறை

பெண்ணைத் தாக்கிய 4 போ் கைது

மயிலாடுதுறையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மயிலாடுதுறையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத் தெருவை சோ்ந்தவா் சங்கா் மகன் ஜீவா (22). இவா் கடந்த 8-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதனால், துக்கத்தில் இருந்த ஜீவாவின் தாய் கமலா, தனது மகனின் நண்பா்களைப் பற்றி குறைகூறி பேசினாராம்.

இதனால், ஆத்திரமைடந்த ஜீவாவின் நண்பா்கள் 4 போ், கமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மகாதேவன் வழக்குப் பதிவு செய்து, கீழநாஞ்சில்நாடு வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ் (26), சுவேதாரண்யம் மகன் சந்திரன் (27), செல்வராஜ் மகன் ஜீவா(26), கீழநாஞ்சில்நாடு மெயின்ரோட்டை சோ்ந்த ரவி மகன் காா்த்திக் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.